தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

BB DAY 48 : எதிர்பார்க்காத வைல்டு கார்டு எண்ட்ரியை இறக்கிய பிக்பாஸ் - அபிஷேக் ராஜா

பிக்பாஸ் நேற்றைய எபிசோட்டில் (நவ.19) வைல்டு கார்டு எண்ட்ரியாக ஏற்கனவே வெளியேறிய நபர் நுழைந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

By

Published : Nov 20, 2021, 2:48 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி 50 நாளைக் நெருங்கிவருகிறது. என்னது அதுகுள்ள 50 நாள் ஆகப் போகுதா.... அப்போ ஏன் வைல்டு கார்டு எண்ட்ரி இன்னும் வரல என நமக்கு யோசனை வந்திருக்கும்.

அது பிக்பாஸுக்கு கேட்டுவிட்டது போல.. உடனே நேற்றைய எபிசோட்டில் (நவ.19) வைல்டு கார்டு எண்ட்ரியை இறக்கிவிட்டார். ஆனால் நாம் யாருமே எதிர்பார்க்காத ஒருவரை இறக்கி ஷாக் கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். யார் அந்த நபர்? 48ஆவது நாளில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் வாங்க.

முதல்முறையாகக் கோபத்தை வெளிக்காட்டிய ராஜு

நேற்றைய எபிசோட் (நவ.19) இரவு நடைபெற்ற நிகழ்வுடன் தொடங்கப்பட்டது. படுக்கை அறையில் பிரியங்கா, ராஜுவிடம் நீ வேலை செய்வதே இல்லை. வீட்டு வேலை செய்யாமல், பாத்திரம் கழுவாமல் ஒரு வேலையை நீ தட்டிக் கழிக்கிறார் என்றார்.

விடாமல் பிரியங்கா இதையே சொன்னதால், ஒரு கட்டத்தில் கடுப்பான ராஜு, "உங்களுக்கு என்ன நான் வேலை தானா செய்யணும், நான் நாளை முழுவதும் செய்கிறேன். வேலை செய்யவில்லை என்றால் இனிமே சொல்ல தேவையில்லை" எனக் கடுமையாகத் திட்டினார்.

கதறி அழுத பிரியங்கா

ராஜுவின் எதிர்பாராத கோபத்தைப் பார்த்த பிரியங்கா கிச்சனி ஏரியாவில் வைத்து அனைவரிடமும் பஞ்சாயத்து வைத்து, கதறி அழுதார். உடனே ராஜு கட்டியணைத்து அவரை சமாதானம் செய்தார்.

காலை மணி ஒளித்தவுடன் பிரியங்காவின் தலைவர் வாரம் என்பதால், அனைவரும் எழுந்து நடனமாடினர். கொட்டும் மழையில் அனைவரும் காலையில் குளிப்பதற்கே யோசனை செய்வார்கள். ஆனால் வருண், அக்ஷரா, ஐக்கி, பிரியங்கா மட்டும் காலையிலேயே தண்ணீர் ஊற்றி விளையாட ஆரம்பித்துவிட்டனர். பிறகு அதே கண்ணாடி டாஸ்க் தொடங்கியது. வழக்கம் போல் பிரியங்கா, ராஜுவின் சுவாரசியமான நகைச்சுவை அதிலிருந்தது.

உள்ளே வெளியே டாஸ்க்

கண்ணாடி டாஸ்க்கின் இரண்டாவது சுற்றாக உள்ளே வெளியே டாஸ்க் கொடுக்கப்பட்டது. மேசையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் பந்தை போட வேண்டும். ஒவ்வொருதடவை பந்து போடாமல் விடுபவர்கள் பாவக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றார் பிக்பாஸ்.

பிரியங்கா- ராஜு, ஐக்கி- இமான் ஆகிய இரண்டு ஜோடிகள் மோதிக்கொண்டனர். இதில் இரண்டு அணிகளும் சமமான புள்ளிகள் எடுத்தனர்.

முட்டை டாஸ்க்

இசைவாணி - தாமரையிடம் தலா ஐந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும், தவறாகப் பதில் சொல்லினால் எதிரே இருக்கும் நபர் மீது முட்டை உடைக்க வேண்டும் என்றார் பிக்பாஸ். இதில் இசைவாணி, தாமரையை விட அதிகமான கேள்விகளுக்குப் பதில் அளித்து வெற்றிபெற்றார். இறுதியாக இதில் இமான், வருண், அக்ஷரா, அணி வெற்றி பெற்றது.

எதிர்பார்க்காத வைல்டு கார்டு எண்ட்ரி
இந்த லக்‌ஷரி பட்ஜெட் பொருள்களை கார்டன் ஏரியாவில் தேர்ந்தெடுக்கும் படி டாஸ்க் வித்தியாசமாக நடைபெற்றது. இரண்டு பெரிய தாயக் கட்டைகளை உருட்ட, அதில் வரும் எண் கொண்ட பெட்டிகளைத் திறக்க வேண்டும்.

அக்ஷராவும், தாமரையும் தாயத்தை உருட்ட அண்ணாச்சி பெட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாகத் திறந்தார். அப்போது ஒன்பதாம் எண் பேட்டியிலிருந்து அபிஷேக் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அவரை பார்த்ததும் பாவனி வேகமாக ஓடி சென்று கட்டிப் பிடித்தார்.

பிரியங்கா அதிர்ச்சியில் இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அபிஷேக்கை கட்டிப்பிடித்து வரவேற்றனர். ஹவுஸ் மேட்ஸ் என்னவோ சந்தோஷமாகத் தான் இருந்தார்கள். ஆனால் நமக்குத் தான் கோபம் வருகிறது. இதை எல்லாம் பார்த்தால், மேலும் மக்கள் ஓட்டு போட்டு வெளியே அனுப்பிய ஒருவரை எதற்காக பிக்பாஸ் உள்ளே மீண்டும் அழைத்துவருகின்றனர் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:BB DAY 47: சைலண்டாக நீருப்பை வெச்சி செய்த வருண்!

ABOUT THE AUTHOR

...view details