பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் அதில் கிடைக்கும் புகழை வைத்து சினிமாவில் ஜொலிக்கின்றனர். ஏற்கனவே இதில் கலந்துகொண்ட ஆரவ், கவின், முகேன், சைரா வில்சன் உள்ளிட்டோர் படங்களில் நடித்து, பிஸியாக வலம் வருகின்றனர்.
அந்த பட்டியலில் தற்போது கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பாலாஜி இணைந்திருக்கிறார். மாடலாக இருந்த அவர் தற்போது ஹீரோவாக படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லிப்ரா புரொடக்ஷன் சார்பாக ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.