ஷேவிங் கிரீமை வைத்து, இந்த பிரியங்கா கேங் செய்யும் வேலைகள் இருக்கிறதே. எப்பா என்ன விட்டுவிடுங்கள் என அந்த கிரீம் வாய் இருந்தால் ஓடிவிடும். புதிதாக இதில் மதுமிதா இணைந்திருக்கிறார். இரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது இவர்கள் அனைவரும், படுக்கையை அறையில் ஷேவிங் கிரீமை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
நாம் மிகவும் பசியாக இருக்கும் நிலையில், வீட்டில் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்கும்போது உப்புமா என்று சொன்னால், பலருக்கும் இருந்த பசி கூட ஓடிவிடும். அதுபோன்ற சம்பவம் தான் பிக்பாஸ் வீட்டில் நடந்திருக்கிறது. உப்புமா என்பதால் பிரியங்கா சாப்பிடவில்லை. ஒரு கட்டத்தில் பசி தாங்க முடியாத அவர், தனக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள் என அழுக ஆரம்பித்தார்.
கமல் ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு அவரிடம் சாப்பாடு கேட்போம் என்றார் இமான் அண்ணாச்சி. உடனே அனைவருக்கும் தங்களுக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்தனர்.
விளையாடு இல்ல தக்காளி வெளியே ஓடு
அதிகமாகத் தூங்குபவர், சுவாரஸ்யமாக இல்லாதவர், மைக்கை சரியாக மாட்டாதவர், ஆங்கிலத்தில் பேசுபவர் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இரண்டு பேரின் பெயர்களை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் கூறினார். நான்கு பிரிவுகளிலும் பிரியங்கா, நிரூப், ஐக்கி, மதுமிதா பெயரை அனைவரும் கூறினர்.
போட்டியாளருக்கு கொடுத்த கேலி பட்டம்
அபிஷேக் - ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங்