அமிதாப் பச்சன் நடித்த 'ஜூண்ட்' படத்தின் ட்ரெய்லர் படத்தயாரிப்பாளர்களால் இன்று (பிப்ரவரி 23) வெளியிடப்பட்டது. இப்படத்தில் தெருவோரக் குழந்தைகளை ஒருங்கிணைத்து, கால்பந்து அணியை உருவாக்கத் தூண்டும் பேராசிரியராக அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.
ஸ்லம் சாக்கர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் விஜய் பார்சேயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மராத்தி திரைப்படமான 'சைரட்' புகழ் ஆகாஷ் தோசர், ரிங்கு ராஜ்குரு உள்ளிட்டோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். நாகராஜ் மஞ்சுளே எழுதி இயக்கியுள்ளார்.
ட்ரெய்லரில் ஓய்வுபெற்ற பேராசிரியரான அமிதாப் பச்சன், குடிசைப்பகுதி வாழ் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். குழந்தைகளின் வாழ்வை, சரியான திசையை நோக்கி, நகர்த்த தேவையானவற்றை செய்கிறார்.
குறிப்பாக, குழந்தைகளின் அடக்க முடியாத ஆற்றலை சரியான திசையில் செலுத்த உதவுகிறார். முன்னதாக ஜூண்ட் 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் திரையிடப்படயிருந்தது.
பின்னர் கோவிட் - 19 நோய்த்தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வருகின்ற மார்ச் 4ஆம் தேதி 'ஜூண்ட்' திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:'பருத்திவீரன்' 15ஆம் ஆண்டு நிறைவு; ட்விட்டரில் கார்த்தி நெகிழ்ச்சி பதிவு