பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். 77 வயதாகும் அமிதாப், அவர் வயதிற்கு ஏற்ற கதைகளை மட்டும் தேர்வுசெய்து நடித்துவருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் ’குலாபோ சிதாபோ’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், குலாபோ சிதாபோ படத்தில் வரும் அமிதாப் பச்சனின் தோற்றத்தை மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், காலால் வரைந்து அசத்தியுள்ளார்.