தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லிப்டில் ரத்தக்கறை - பீதியில் பிக் பாஸ் கவின்! - பிக் பாஸ் கவின்

பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் கவினின் புதிய பட போஸ்டர் வெளியீடு
பிக் பாஸ் கவினின் புதிய பட போஸ்டர் வெளியீடு

By

Published : Mar 14, 2020, 8:28 AM IST

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து 'நட்புன்னா என்னனு தெரியுமா' படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதற்கிடையில் ’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனத்தில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் கவின் நடிக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளம்பரப் பட இயக்குனரான வினித் வரபிரசாத் இயக்கும் இப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். ’லிப்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

கவின் நடிக்கும் லிப்ட் பட ஃபர்ஸ்ட் லுக்போஸ்டர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், கவின், அம்ரிதா இருவரும் ஒரு லிப்ட்டில் அமர்ந்திருக்க அவர்களை சுற்றி ரத்தக்கறை உள்ளது.

இப்படம் குறித்து படகுழுவினர் கூறுகையில், ‘ஒரு பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக அமையும். லிப்ட் என்ற டைட்டில் அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜி உள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் இப்படத்திற்கு பின்னணி இசையை மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார். விரைவில் படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும்’’ என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!

ABOUT THE AUTHOR

...view details