பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கிய நாள் முதல் இந்த பிரியங்கா கேங் செய்யும் அட்டூழியங்களைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா? என நாம் நினைத்திருக்கும் வேளையில், நான் இருக்கிறேன் எனக் கமல்ஹாசன் என்ட்ரி கொடுத்தார்.
சனிக்கிழமை புரோமோவே வேற லெவலில் இருந்தது. எப்போதும் போல, எபிசோட்டில் ஒன்றுமே இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே நினைக்காத வகையில் கமல்ஹாசன், பிரியங்கா கேங்கை எண்ணெயில் போட்ட கருவேப்பிலை போல் வறுத்து எடுத்தார். மக்கள் உங்கள் கேங் மீது வெறுப்பாக இருக்கின்றனர் எனக் கமல்ஹாசன் இதன் மூலம் அவர்களுக்கு ஹிண்ட் கொடுத்தார். அப்படியும் அவர்கள் புறம் பேசுவதை நிறுத்தாமல் இருந்தனர்.
சரி வாங்க நேற்று (அக்.24) வீட்டில் நடைபெற்ற சம்பவங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.
மஞ்சள் டீசர்ட் அணிந்து மிகவும் கூலாக என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன், ஐக்கி பாடிய பாடல் என்ன என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டார். இங்கு நாம் ஒரு விஷயத்தைச் சரியாக கவணிக்க வேண்டும். நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதை அவர் மறைமுகமாகத் தெரிவிக்கிறார்.
சிபியின் தலைவர் பதவி
கடந்த வாரம் தலைவராக இருந்த சிபியிடம் எப்படி இருந்தது கேப்டனாக பயணித்த ஒருவாரம் எனக் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். வழக்கம் போல் அனைவரும் சொல்லும் பதிலான, நன்றாக இருந்தது, பிடித்தது, வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றார் சிபி.
ஏன் மாலை மாற்றப்பட்டது?
தலைவர் பதிவிக்கான டாஸ்க்கில் எதற்காக ராஜு கழுத்திலிருந்த மாலை, சிபி கழுத்திற்கு மாற்றப்பட்டது எனக் கமல் கேள்வி எழுப்பினார். உடனே, ''சிபி வீட்டில் நேரத்தை பின்பற்றுபவர். அதனால் அவரை தலைவராகத் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்" என நினைத்து தான் செய்தோம் என அபிஷேக் கூறினார். அதற்குக் கமல், 'நான் உங்களைக் கேள்வி கேட்கவே இல்லையே' என அவரின் மூக்கை உடைக்கும் வகையில் பதில் கொடுத்தார். சிபியின் தலைவர் பதிவிக்கு அனைவரும் பாசிட்டிவான கமெண்ட்ஸ் கொடுத்தனர்.
இமான் அண்ணாச்சி தன்னிடம் சரியான நேரத்திற்குச் சாப்பாடு கொடுக்கவில்லை எனக் கூறியது மனதிற்குக் கஷ்டமாக இருந்ததாகப் பாவனி தெரிவித்தார்.
இரண்டாவதாக வெளியேறியது யார்?
ஐக்கி, அபினய், பிரியங்கா, சின்ன பொண்ணு, அபிஷேக் ஆகியோர் நாமினேஷனில் இருந்தனர். இதில் முதலாவதாகப் பிரியங்கா, அபினய் காப்பாற்றப்பட்டதாகக் கமல்ஹாசன் தெரிவித்துவிட்டு, இடைவெளி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அதுக்குள்ள சண்டையா...
கமல்ஹாசன் இடைவெளி விட்ட சென்ற சின்ன கேப்பில் பிரியங்கா கோங்கிற்குள் சண்டை வந்துவிட்டது. நிரூப் தன்னை ஏமாற்றி நாணயம் எடுத்துக் கொண்டதாகப் பிரியங்கா வாதிட்டார். நீரூப் அதற்கு தன் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக் கூறினார்.