தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த நடிகைக்கு கரோனா! - பிக்பாஸ் பிரபலம் பாவனிக்கு கரோனா

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து சில நாள்களே கடந்துள்ள நிலையில் பாவனிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

big-boss-bavni-affected-corona
big-boss-bavni-affected-corona

By

Published : Jan 20, 2022, 3:29 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து சில நாள்களே கடந்துள்ள நிலையில் பாவனிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5இல் பாவனி போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். 106 நாள்கள் எலிமினேஷன் ஆகாமல் தக்கப்பிடித்த பாவனி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

பாவனிக்கு கரோனா

இந்நிலையில் வெளியே வந்து சில நாள்களே கடந்துள்ள நிலையில் பாவனிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ”லேசான அறிகுறியுடன் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி நான் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாவனிக்கு கரோனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல் மூலமாக நந்தினி கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த பாவனி என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க : முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்த மீரா ஜாஸ்மின்!

ABOUT THE AUTHOR

...view details