உலகளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவருகிறது. இந்தத்தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவிவரும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதற்குத் தடை விதித்து, அந்தந்த மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.
அதேபோன்று பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா தொற்று சிகிச்சைக்கு என்று தனி வார்டு ஏற்படுத்த (Isolation Ward) காலியான ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையைப் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டரில், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் சிறந்த யோசனை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில்,"ஊரடங்கு உத்தரவால், தற்போது நாடு முழுவதும் ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு 60 ஆயிரம் படுக்கைகள் கொண்ட 20 அறைகள் வீதம், நாடு முழுவதும் 3 ஆயிரம் ரயில்களை கரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சையளிக்கும் தனி வார்டாக மாற்றலாம். சில சந்தர்ப்பங்கள் அல்லது அவசரக் காலங்களில் மருத்துவமனைகளில் அமைக்கப்படும் வார்டுகளைவிட, இந்தத் திட்டம் சிறந்தது"