தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரூ. 1.75 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அமிதாப் பச்சன் - Amitabh bacchan gives ventilators

நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

By

Published : Jun 24, 2021, 10:08 AM IST

கரோனா தொற்று காரணமாக பல மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த உதவிகளை மருத்துவமனைக்குச் செய்துவருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இரண்டு உயர் தொழில்நுட்ப வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறையில் வென்டிலேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுவரை சுமார் 30 நோயாளிகள் உபகரணங்களைப் பயன்படுத்தி சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரின் இந்தச் சேவையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:நாளை ஓடிடியில் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’

ABOUT THE AUTHOR

...view details