தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 151ஆவது திரைப்படம் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’. சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணின் தயாரிப்பில், ராயல்சீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது.
‘சை ரா நரசிம்ம ரெட்டி’ ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு - Chiranjeevi
டோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![‘சை ரா நரசிம்ம ரெட்டி’ ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4054812-thumbnail-3x2-chiran.jpg)
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், இத்திரைப்படத்தில் அனுஷ்கா ரெட்டி, தமன்னா, விஜய் சேதுபதி, ஜகுபதி பாபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்க ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.