தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிரஞ்சீவி பிறந்தநாள்: புது பட அப்டேட் வெளியீடு! - Bholaa Shankar poster

நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு போலா சங்கர் பட டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

By

Published : Aug 22, 2021, 11:37 AM IST

தெலுங்கு திரைத்துறையின் ’மெகா ஸ்டார்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவர் இன்று (ஆக.22) தனது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இதனையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிரஞ்சீவி நடிக்கும் போலா சங்கர் பட டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு பட நடிகர் மகேஷ் பாபு இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மெஹர் ரமேஷ் இயக்கும் இந்தப் படத்தை அனில் சுங்கரா தயாரிக்கிறார். சிரஞ்சீவியும், மெஹர் ரமேஷும் இணையும் முதல் படம் இதுவாகும். விரைவில் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி தற்போது ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இயக்குநர் மோகன் ராஜா இயக்கி வரும் இப்படத்திற்கு, காட்ஃபாதர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details