தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரையரங்குகளை செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு நன்றி - பாரதிராஜா!

50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகளை செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

திரையரங்கங்கள் செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு நன்றி
திரையரங்கங்கள் செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு நன்றி

By

Published : Aug 23, 2021, 8:23 PM IST

இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு ஆண்டுகள் திரையுலகின் கருப்பு நாள்களாக்கி விட்டது. கரோனா பரவல் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது.

நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாள்களில், இப்போது திரையரங்குகளை இன்றுமுதல் (ஆக. 23) 50 விழுக்காடு இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

திரையரங்கங்கள் செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா

திரையரங்குகளில் திருவிழா

இந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது. ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம்.

திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்த ஒரு அறிவிப்பை, வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அபிஷேக் பச்சனுக்கு காயமா? மருத்துவமனை வந்த அமிதாப்... என்ன தான் நடந்தது?'

ABOUT THE AUTHOR

...view details