நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கியிருக்கும் திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜோதிகா, பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி வழங்கிடப் போராடும் ஒரு நேர்மையான பெண் வழக்குரைஞரின் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் நேற்று (மே 29) அமேசான் பிரைமில் வெளியானது. படத்தை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டிவருகின்றனர்.