தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், இயக்குநர் பாரதிராஜாவை ஒருமனதாக தலைவராகத் தேர்ந்தெடுக்க இயக்குநர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு
சென்னை: இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாரதிராஜா
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில் கடந்த முறை இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்று அச்சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில், கமலா திரையரங்கில் நடைபெற்ற இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பாரதிராஜா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.