ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசை குழுவினரோடு நாட்டு இசைக் கலைஞர்களும் பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் 'பிகில்' படத்தில் இடம்பெற்ற "சிங்கப்பெண்ணே" பாடல் உள்பட பல பாடல்களை பாடவுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொக்கிஷம் ஏ.ஆர். ரஹ்மான்: பாரதிராஜா! - இசை நிகழ்ச்சி
இந்தியாவின் மிகப் பெரிய பொக்கிஷம் ஏ.ஆர். ரஹ்மான் என்று இசைப்புயலுக்கு பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரதிராஜா
இந்நிலையில், இது குறித்து இயக்குநர் பாரதிராஜா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இறைவனின் குழந்தை ஏ.ஆர்.ரஹ்மான், நாம் அவரை நினைத்து பெருமைப்பட வேண்டும். அவர் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.