தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லிங்குசாமியுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாரதிராஜா - பாரதிராஜா படங்கள்

இயக்குநர் பாரதிராஜா தனது பிறந்தநாளை ‘ராம் பொத்தேனி 19’ படக்குழுவுடன் இணைந்து கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா

By

Published : Jul 17, 2021, 8:20 PM IST

இயக்குநர் பாரதிராஜா இன்று (ஜூலை.17) தனது 78ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜா தற்போது படங்களை இயக்குவது மட்டுமின்றி ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், ‘ராம்பொத்தேனி 19’ படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லிங்குசாமியுடன் இயக்குநர் பாரதிராஜா

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தனது பிறந்தநாளை, ‘ராம்பொத்தேனி 19’ படப்பிடிப்பில் இயக்குநர் லிங்குசாமியுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:நகுல் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜான்வி

ABOUT THE AUTHOR

...view details