நடிகர் பரத் காவல் உயர் அலுவலராக நடித்து, வருகின்ற வாரம் வெளியாகவுள்ள திரைப்படம் 'காளிதாஸ்'. இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானையும் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவையும் நடிகர் பரத் சந்தித்தார். அப்போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து 'காளிதாஸ்' படத்தின் ட்ரெய்லரை பாராட்டி படம் வெற்றியடைய பரத்தை இருவரும் வாழ்த்தினர்.