தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அயோத்யா திரைப்பட விழா: நடிகர் ஆர்யாவுக்கு சிறந்த நடிகர் விருது - ஆர்யாவிற்கு விருது

அயோத்யா திரைப்பட விழாவில் நடிகர் ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

அயோத்யா திரைப்பட விழா : சிறந்த நடிகருக்கான விருதை ஆர்யா பெற்றுக்கொண்டார்
அயோத்யா திரைப்பட விழா : சிறந்த நடிகருக்கான விருதை ஆர்யா பெற்றுக்கொண்டார்

By

Published : Dec 5, 2021, 10:42 PM IST

சென்னை: இயக்குனர் சாந்தக்குமார் இயக்கத்தில், ஆர்யா நடித்து 2019இல் வெளியான திரைப்படம் ’மகாமுனி’.

சிறந்த கதையம்சமும், திரைக்கதையும், தொழில்நுட்ப நேர்த்தியும் ஒன்று சேர்ந்து, இத்திரைப்படம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத திரைப்பதிவாய் அமைந்தது. வெளியான நேரத்திலேயே விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த மஹிமா நம்பியாருக்கு, மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இந்நிலையில் கதாநாயகனாக நடித்த ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது, அயோத்யா திரைப்பட விழாவில் கிடைத்துள்ளது.

இது குறித்து ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், 'அயோத்யா திரைப்பட விழாவின் 15ஆவது ஆண்டு விழாவில் மகாமுனி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. டைரக்டர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றிகள்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வலிமை இரண்டாவது சிங்கிள்; அம்மா பாடல் வரிகள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details