தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

3டியில் வெளியாகும் 'பெல் பாட்டம்' திரைப்படம்! - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

'பெல் பாட்டம்' திரைப்படம் 3டியில் வெளியாகவிருப்பதாக படத்தின் நாயகன் அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார்.

பெல்பாட்டம்
பெல்பாட்டம்

By

Published : Aug 2, 2021, 1:39 PM IST

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில், ரஞ்சித் திவார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'பெல் பாட்டம்'. இதில் அக்‌ஷய் குமாருடன் இணைந்து வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வரும் 19ஆம் தேதி 'பெல் பாட்டம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படம், 3டியிலும் வெளியாகும் எனப் படத்தின் நாயகன் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 'பெல் பாட்டம்' படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் அக்‌ஷய் குமார் ரசிகர்களுக்கு இச்செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details