தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பீஸ்ட்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே? - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 'பீஸ்ட்' படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பீஸ்ட்
பீஸ்ட்

By

Published : Sep 20, 2021, 12:41 PM IST

’மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துவரும் படம், 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.

'பீஸ்ட்' படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 1ஆம் தேதி சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடந்து முடிந்தது.

விஜய்

இதனையடுத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினர் இன்று (செப்.20) டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அங்கு சுமார் ஐந்து நாள்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக விமானத்தில் நடிகர் விஜய் பயணிக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும், அக்டோபர் இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் பொங்கல் பண்டிகையன்று 'பீஸ்ட்' வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நதியா?

ABOUT THE AUTHOR

...view details