நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் 'பீஸ்ட்';
இந்தப் பாடலை பாடியவர் உங்கள் 'விஜய்' : பீஸ்ட் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு - நெல்சன்
நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
![இந்தப் பாடலை பாடியவர் உங்கள் 'விஜய்' : பீஸ்ட் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு இந்தப் பாடலை பாடியவர் உங்கள் ’விஜய்’ : பீஸ்ட் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14752393-thumbnail-3x2-vijay.jpg)
இந்தப் பாடலை பாடியவர் உங்கள் ’விஜய்’ : பீஸ்ட் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்
இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு, அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜாலியோ ஜிம்கானா' எனும் அந்தப்பாடலை நடிகர் விஜயே பாடியிருக்கிறார்.
அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப்பாடலின் வரிகளை கு.கார்த்திக் எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' இணையதளத்தில் பெரும் சாதனை படைத்து வரும் நிலையில், இரண்டாவது சிங்கிளான இப்பாடல் வருகிற மார்ச்.19அன்று வெளியாக இருப்பதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.