தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 'பீஸ்ட்' பட செட் - தற்போதைய நடிகர் விஜய் குறித்த செய்திகள்

சென்னையில் பெய்த கனமழையால் 'பீஸ்ட்' படத்திற்காகப் போடப்பட்டிருந்த செட் பாதிப்படைந்துள்ளது.

பீஸ்ட் பட செட்
பீஸ்ட் பட செட்

By

Published : Nov 12, 2021, 9:37 PM IST

'மாஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம், 'பீஸ்ட்'. நெல்சன் இயக்கிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஏற்கெனவே படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக 'பீஸ்ட்' படத்திற்காகப் போடப்பட்டிருந்த செட் முழுவதும், வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

வெள்ளம் வடிந்தவுடன் மீண்டும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details