நடிகர் விஜய்யின் 65ஆவது திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களை விஜய்யின் பிறந்த நாளன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், 'பீஸ்ட்' படத்தின் போஸ்டர் ட்விட்டரில் வெளியான 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.