ஈகா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக 'பிக்பாஸ்' புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார். ஜி மதன் படத்தைத் தொகுக்க, சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதிஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'லிஃப்ட்' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினித் வர பிரசாத் இயக்கியுள்ளார். பாடலாசிரியர் ஆர். நிஷாந்த் எழுதிய 'இன்னா மயிலு' பாடலை நடிகர் சிவகார்த்திகேயன், பிகில், மாஸ்டர் பட புகழ் பூவையார் இணைந்து பாடியுள்ளனர்.