நடிகர் விஜய் நடிப்பில், அடுத்து வெளிவரவிருக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், ‘அரபிக் குத்து’ கடந்த மாதம் வெளியாகி பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறது.
'நெல்சன் வேற மாறி..!': கலகலப்பான ’ஜாலியோ ஜிம்கானா’ பிரோமோ - பீஸ் சிங்கிள்
இளைய தளபதி விஜய் நடிப்பில், அடுத்து வெளிவரவிருக்கும் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், ‘அரபிக் குத்து’ கடந்த மாதம் வெளியாகி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா’ இன்று (மார்ச் 19) மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது.
'நெல்சன் வேற மாறி..!': கலகலப்பான ’ஜாலியோ ஜிம்கானா’ பிரோமோ
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா’ இன்று (மார்ச் 19) மாலை 6:00 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.
இந்நிலையில், பாடலின் ஒரு சிறிய மேக்கிங் பிரோமோ அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நெல்சன் மற்றும் அவரின் பிரத்யேக காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லீயுடன் சேர்ந்து லூட்டி அடிக்கிறார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது.