விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட நிலையில் உள்ளது. இந்தத் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் திரைப்படத்தின் ஹலமதி ஹபீபோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பாடலான ஜாலியோ ஜிம்கானா லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் இந்தப் பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலில் விஜய் வித்தியாசமான சட்டை அணிந்து செம கூலாக நடனமாடுகிறார். ஸ்டைலாக தோன்றும் விஜயை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
மஞ்சள் சட்டை, கூலிங் கிளாஸ், சால் அண்ட் பெப்பர் லுக்கில் அசத்தலான கெட்டப்பில் உள்ளார் விஜய். இந்த பாடலுக்கான புரோமோ இன்று காலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'நெல்சன் வேற மாறி..!': கலகலப்பான ’ஜாலியோ ஜிம்கானா’ பிரோமோ