சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற ’மேன் வெர்சஸ் வைல்ட்’ படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். இதுமட்டுமின்றி படப்பிடிப்பில் ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உலகம் முழுவதும் ட்ரெண்டான இந்நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில், தற்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், ரஜினி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதோ தயாராகிக் கொண்டிருக்கிறது. நான் உலகம் முழுவதும் நிறைய பிரபலங்களோடு பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் இது எனக்கு சிறப்புமிக்க ஒன்று” என்று குறிப்பிட்டிருந்தார்.