பிக்பாஸ் 5ஆவது சீசன் நேற்று (அக்.3) கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் யூ-டியூப் விமர்சகர் 'ஓபன் பண்ணா' அபிஷேக் ராஜா பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அபிஷேக் ராஜா முன்னதாக மேடையில் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், "ஊருக்கே தெரியும் டா உங்களை கேமரா வைத்து எடுத்துக்கிட்டு இருப்பது. ஆனால் கிடைத்த 100 நாளில் நீ தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டும் எனச் செய்யும் வேலை இருக்கிறதே. அதைத் தான் என்னால் தாங்கவே முடியல. கேட்டால் பிக்பாஸ் என்று சொல்லு வாங்க" எனப் பேசியுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், அது எப்படி பிக்பாஸ் குறித்து குறைச்சொல்லிவிட்டு அந்த நிகழ்ச்சிக்கே அவர் சென்று இருக்கிறார்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க:பிக்பாஸ் 5- தாமரைச் செல்வியைப் பயமுறுத்தும் ராஜு