தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து

சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆளுநர்
ஆளுநர்

By

Published : Apr 1, 2021, 8:16 PM IST

நடிகர் ரஜினிகாந்த்திற்கு திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக 51ஆவது தாதா சாகேப் பால்கே விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், அரசியல் கட்சியினர், பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த உயரிய விருது பெற்ற சாதனையாளர்களின் பட்டியலில் தற்போது நீங்கள் சேர்த்துள்ளீர்கள். நான் உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய திரைத்துறைக்கு நீங்கள் சிறப்பான, தரமான பங்களிப்பு கொடுத்துள்ளீர்கள். உங்கள் படத்தை மக்கள் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள சமூக கருத்துகளை எடுத்துக் கொள்கின்றனர். படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக-கலாசார, அரசியல் தொடர்பான விஷயங்களுக்கும் குரல் கொடுக்கிறீர்கள்.

இறைவன் உங்களுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details