தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் சேதுபதி தாக்கப்படவில்லை: பெங்களூரு காவல்துறை - பெங்களூரு காவல்துறை

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று பெங்களூரு காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, Vijay Sethupathi
விஜய் சேதுபதி

By

Published : Nov 4, 2021, 12:38 PM IST

பெங்களூரு:பெங்களூரு விமானநிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி சில நண்பர்களுடன் காவல்துறை பாதுகாப்போடு வெளியேற முயன்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரை பின்னால் இருந்து தாக்குவது போன்ற காணொலி வெளியாகி இருந்தது.

அந்த நபர், யாரை தாக்க முயன்றார் என்று தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தியவரை பிடித்தனர். என்ன காரணத்திற்காக அந்த நபர் தாக்குதல் நடத்தினார் என்ற விவரம் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

வழக்குப்பதிவு இல்லை

அதில்,"விஜய் சேதுபதியுடன் விமானத்தில் வந்த நண்பர் ஒருவருக்கும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. அவரை தாக்கவே இவர் அங்கு வந்துள்ளார். விஜய் சேதுபதிக்கும் தாக்குதலில் ஈடுபட்டவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

விஜய் சேதுபதியை அவர் தாக்கவில்லை. விஜய் சேதுபதியின் நண்பர் தரப்பும், தாக்குதல் நடத்தியவரும் சமாதானம் செய்துகொண்டதால் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை" என்றனர்.

இதையும் படிங்க: VideoIn: திடீரென விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர்!

ABOUT THE AUTHOR

...view details