இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’காப்பான்’. இது கே.வி.ஆனந்த்- சூர்யா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். தெலுங்கிலும் நடிகர் சூர்யாவுக்கு பெரிய மார்கெட் உள்ளதால், காப்பான் படம் தெலுங்கில் ’பந்தோபஸ்த்’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆர்யா, சாயிஷா, பூர்ணா, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திர பட்டாளமே சூர்யாவுடன் இணைந்து காப்பானில் நடித்திருக்கிறது.