தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கு தடை! - இயக்குநர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர் கே செல்வமணி

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கு தடை விதித்ததுடன், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கு தடை!
திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கு தடை!

By

Published : Jan 21, 2022, 7:24 PM IST

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமிருப்பதன் காரணமாக காவல் துறை, மாநகராட்சி நிர்வாகத்தினர் தேர்தலுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

நிலைமை சீரடைந்த பிறகு தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலை வருகின்ற 25ஆம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலும் வெளியிடப்பட்டன. அதன்படி தேர்தலை நடத்த மாநகராட்சியிடமும், காவல்துறையினரிடமும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அனுமதி கோரியது.

தேர்தல் ஆணையர் அறிக்கை

இருப்பினும் கரோனா தொற்று சென்னையில் கடுமையாக இருப்பதை சுட்டிக் காட்டி தேர்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகையால் நிலைமை சீரடைந்த பிறகு தேர்தல் நடத்தும் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தலில் இயக்குநர் கே. பாக்யராஜ், ஆர்.கே. செல்வமணி ஆகியோர் தங்களது அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’மன்மத லீலை’ படத் தலைப்பு சர்ச்சை; தயாரிப்பாளர் ஆடியோ வெளியீடு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details