2016ஆம் ஆண்டு சாதிய வன்மத்தை அப்பட்டமாக காட்டும் ‘சாய்ரட்’ என்ற மராத்திய திரைப்படம் வெளியானது. இது நம்ம பாலாஜி சக்திவேல் எடுத்த ’காதல்’ திரைப்படம் மாதிரி இருக்கிறது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 2004ஆம் ஆண்டு வெளியான ‘காதல்’ திரைப்படம் சாதிய வன்மம் பற்றி தெளிவாக காட்டியிருந்தது. எனினும் ‘சாய்ரட்’ திரைப்படம், குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி எடுக்கப்பட்ட படம் என்பதால், பெரிதும் பாராட்டுகளை பெற்றது. ஆனால், ‘காதல்’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாகும்.
நகரத்துக்கு வந்தும் சாதி நம்மை வேட்டையாடுகிறது - பாலாஜி சக்திவேல் - சாதிய ஒடுக்குமுறை
‘காதல்’ திரைப்படம் குறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த இயக்குநர் பாலாஜி சக்திவேல், நகரம் வந்தும் சாதி நம்மை வேட்டையாடுகிறது என கூறியிருக்கிறார்.
Cult classic Kadhal
இந்த படம் குறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பாலாஜி சக்திவேல், ”நகரத்துக்கு வந்தும் சாதி நம்மை வேட்டையாடுகிறது. அதனால்தான் ‘காதல்’ படத்தில் சாதிவெறி கும்பல் அந்த காதலர்களை தேடி வருவது போல காட்சிப்படுத்தியிருந்தேன். நான் சாதிக்கு எதிரான குரலை தெளிவாகவும் உரக்கவும் உரைக்க விரும்புகிறேன். சாதிய எதிர்ப்பை நான் வலிமையாக வலியுறுத்துகிறேன், வலியோடு வலியுறுத்துகிறேன். நான் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவன்” என்றார்.