தெலுங்கில் மெகா ஹிட் அடித்த விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான "அர்ஜூன் ரெட்டி" படத்தை, இயக்குநர் பாலா "வர்மா" என்ற தலைப்பில் தமிழில் இயக்கினார். "வர்மா" படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுக கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் வெளியாக சிறிது நாட்களே உள்ள நிலையில், வர்மா திரைப்படம் வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்திருந்தது.
நான் மட்டுமே எடுத்த முடிவு -'வர்மா' படம் குறித்து பாலா - வர்மா வெளியாகாது
வர்மா படத்தில் இருந்து நீங்குவது தான் மட்டுமே எடுத்த முடிவு, இது குறித்து தயாரிப்பாளர் நிறுவனத்திடம் முன்னதாகவே அறிவித்தேன் என்று இயக்குநர் பாலா அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு படம் போல் விறுவிறுப்பாக இயக்கவில்லை, எதிர்பார்த்த அளவில் படத்தை இயக்கி தரவில்லை. அதனால் பாலா படத்தில் இருந்து நீக்கப்படுகிறார். வேறு இயக்குநர் மற்றும் புதிய நடிகர்களை வைத்து புதிதாக "வர்மா" படம் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ள பாலா, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது தான் மட்டுமே எடுத்த முடிவு என்றும், இது குறித்து முன்னதாகவே தயாரிப்பு நிறுவனத்திடம் அறிவித்தேன் என்றார். மேலும், தயாரிப்பாளர் தரப்பில் தரப்பட்ட தவறான தகவலால் இவ்விளக்கத்தை தர வேண்டிய நிலையில் உள்தாகவும், துருவ் விக்ரமின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதைப்பற்றி மேலும் பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்தார்.