தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

74ஆவது பாஃப்டா விருதுகள் அள்ளிய படங்கள் எவை?

திரைத்துறையில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான ’பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்’ எனப்படும் பாஃப்டா (BAFTA) விருதுகள் வழங்கும் விழா நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்தது. இதில் விருதுகள் அள்ளிய திரைப்படங்கள் குறித்த தொகுப்பைக் காணலாம்.

பாஃப்டா
பாஃப்டா

By

Published : Apr 13, 2021, 12:06 PM IST

  • ராயல் ஆல்பர்ட் ஹாலில் நேற்று முன் தினம் (ஏப்.11) இரவு நடைபெற்ற 74ஆவது பிரிட்டிஷ் அகாடமி ஃபார் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாஃப்டா) விருதுகளில் பிரான்சஸ் மெக்டார்மண்ட் நடிப்பில் வெளியான 'நோமட்லேண்ட்' (Nomadland) நான்கு விருதுகளை வென்றுள்ளது.
  • 83 வயதான பழம்பெரும் நடிகரான ஆந்தோனி ஹாப்கின்ஸ் ’தி ஃபாதர்’ (The Father) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
  • ராமின் பஹ்ரானி இயக்கத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான ’தி ஒயிட் டைகர்’ (The White Tiger) சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை பிரிவில் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ’தி ஃபாதர்’ படத்திடம் விருதை நழுவ விட்டது.
  • நகைச்சுவை திரில்லரான ’பிராமிஸிங் யங் வுமன்’ (Promising Young Woman) திரைப்படம் இரண்டு விருதுகளையும், அனிமேஷன் படமான ’சோல்’ சிறந்த அனிமேஷன் மற்றும் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவுகளில் விருதுகளையும் வென்றது.
  • ’நோமட்லேண்ட்’ சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை (பிரான்சிஸ் மெக்டார்மண்ட்), சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றது.
  • ’ஜூடாஸ் அண்ட் த பிளாக் மேசியா’ (Judas And The Black Messiah) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் டேனியல் கலுயா வென்றார்.கொரிய நடிகை யு-ஜங் யங், ’மினாரி’ (Minari) படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். இந்த விருதைப் பெற்ற அவர், ​​இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
  • எழுத்தாளர்-இயக்குநர் ரெமி வீக்கஸ் சிறந்த அறிமுக பிரிட்டிஷ் எழுத்தாளர், இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் பிரிவில் தனது திகில் திரில்லர் படமான ’ஹிஸ் ஹவுஸ்’ (His House) க்காக வென்றார்.
  • தாமஸ் வின்டர்பெர்க் இயக்கிய டேனிஷ் திரைப்படமான ’அனதர் ரவுண்ட்’ (Another Round) ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி படத்திற்கான விருதை வென்றது.
  • சிறந்த ஆவணப்படத்துக்கான விருது ’மை ஆக்டோபஸ் டீச்சர்’ (My Octopus Teacher) படத்திற்கு வழங்கப்பட்டது
  • இந்த ஆண்டு பாஃப்டா விருதுகளை தொகுத்து வழங்கியவர்களில் நடிகை பிரியங்கா சோப்ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details