சுஜுத் இயக்கத்தில் யுனி கிரியேஷன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் 'சாஹோ'. இப்படத்தில் பிரபல நடிகர் பிரபாஸும் பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது.
ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த 'பேட் பாய்' சாஹோ - பேட் பாய்
பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள சாஹோ படத்தின் பேட் பாய் பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.
பின்னர் வௌிவந்த இப்படத்தின் காதல் சைக்கோ பாடல், பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது. ஜாக்குலின் பெர்னாண்டஸும் பிரபாஸும் 'பேட் பாய்' என்ற பாடல் ரசிகர்களின் மத்தியில் களைகட்ட காத்திருக்கிறது. பாட்ஷா, நீதி மோகன் ஆகியோர் பாடிய இந்த பாடல் அதிரடி-த்ரில்லரில் படத்தின் ஒரு முக்கியமான சண்டைக் காட்சியின் பின்னணியில் வருகிறது.
இந்நிலையில் இப்பாட்டு ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. பிரபாஸுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வமாய் இருந்த ஜாக்குலின் இப்பாடல் படப்பிடிப்பு இரண்டே நாட்களில் முடிந்தது.