கிகி சேலஞ்ச், ஓடும் காரில் இருந்து இறங்கி பாட்டு பாடுவது உலக அளவில் ட்ரெண்டானது. இதனால் உயிரிழப்புகளும் நடந்தன. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து பிட்னஸ் சேலஞ்ச், உடற்பயிற்சியின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பெறுவது என இப்படி பல சேலஞ்ச்கள் அவ்வப்போது டிரெண்டாகின. இந்நிலையில் பாட்டில் மூடி சேலஞ்ச் உலக அளவில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
கிகி சேலஞ்சை ஓரங்கட்டிய பாட்டில் மூடி சேலஞ்ச்! #bottlecapchallenge - கஜகஸ்தான்
ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் போல தற்போது பாட்டில் மூடி சேலஞ்ச், ஹாலிவுட் நடிகர் முதல் பாலிவுட் நடிகர் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இந்த பாட்டில் மூடி சேலஞ்சை கஜகஸ்தானைச் சேர்ந்த டேக்வாண்டா தற்காப்புக் கலை வீரர் பராபி டாவ்லட்சின், தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க மூடி மட்டும் தனியாக தெறித்து பறக்கும் வகையில் பேக் கிக் செய்யும் வீடியோவை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சேலஞ்சை வேறு யாராவது செய்ய முடியுமா என சவால் விடுத்தார். இந்த வீடியோ உலக அளவில் ட்ரெண்டானது.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகை வொயிட்னி கம்மிங்ஸ், நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர் உள்ளிட்ட பிரபலங்கள் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டனர். இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், அர்ஜுன் உள்ளிட்டோர் பாட்டில் மூடி சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது பலரும் இந்த சவாலை செய்து வருகின்றனர்.