நடிகரும் முன்னணி ஆங்கருமான ரியோ ராஜ், தமிழ் சினிமாவில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னரே, தனது நெடுநாள் காதலியான ஸ்ருதியை திருமணம் செய்துகொண்டார் ரியோ. திரைத்துறையில் தற்போது இவர் ஆர்வம் காட்டிவரும் நிலையில் ஸ்ருதி கர்ப்பமான செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது அவருக்குச் சிறப்பாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் பிரபல சீரியல் நடிகர்கள், நடிகைகள் பலரும் கலந்துகொண்டு ரியோ தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.