'அருவா சண்ட' படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ராஜா, தற்போது புதுமுகங்களை வைத்து பார்கவி என்னும் படத்தை தயாரித்து, இயக்கிவருகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டார்.
இப்படம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜா கூறியதாவது, ஒரு படத்தை இயக்குவது பெரிய வேலை இல்லை. படத்தை தயாரிப்பது தான் கலைத்துறையில் கடினமான விஷயம். தயாரிப்பை விட சுலபமானது தான் இந்த இயக்குநர் வேலை.
இயக்குநர் மட்டும் அல்லாமல் பல கலைஞர்களை உருவாக்கி அவர்களுக்கு வசதியான வாழ்வியலை உருவாக்கி கொடுத்த பல தயாரிப்பாளர்கள் நிலைமை இன்று கேள்விக்குறியாக உள்ளது.
எனது படைப்பான 'பார்கவி' படத்தின் கதை, திரைக்கதையை நானே எழுதி இயக்குகிறேன். 'பார்கவி' வரலாற்று படமாகும். இதை இயக்குவதற்கு எனக்கு உறுதுணையாக அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் பாண்டி செல்வா, ராஜி கோபி ஆகியோர் இப்படத்தில் இணை இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டமான படத்தை என்னால் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் அனுபவம் மட்டும் அல்ல, நுனுக்கமான தொழில் நுட்பமும் தெரிந்தவர்கள். எனவே படம் வெற்றி படமாக அமைவது உறுதி.
பார்கவி படத்தில் கதாநாயகனாக முகேஷ் என்ற இளைஞரும், கதாநாயகியாக மாடலிங் துறையில் அனுபவம் உள்ள ஸ்ரேயா என்பவரும் நடிக்கின்றனர். இருவரும் நடிப்பு பயிற்சிகள் பெற்று வருகிறார்கள். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்புடன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் மரணம்!