தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாகுபலி' என் வாழ்க்கையில் மிக முக்கியப்படம் - உருகிய பிரபாஸ் - பாகுபலி 2

'பாகுபலி' என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என நடிகர் பிரபாஸ் உருக்கமாகக் கூறியுள்ளார்.

Baahubali
Baahubali

By

Published : Apr 28, 2020, 2:11 PM IST

இயக்குநர் ராஜமெளலியின் பிரமாண்ட இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டோர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாகுபலி'. 2015ஆம் ஆண்டு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள், இந்த வரலாற்றுப் படத்தில் நடித்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2', 2017ஆம் ஆண்டு வெளிவந்து உலக அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது.

'பாகுபலி 2' வெளிவந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் கதாநாயகன் பிரபாஸ் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில், ' 'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறேன். மேலும், என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும்; எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details