தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சுவாமியே சரணம் ஐயப்பா...' - சரணகோஷங்களுடன் ஐயப்பனைத் தரிசித்த சிம்பு! - சபரிமலை

ஐயப்பனுக்கு மாலையிட்ட சிம்பு முறையாக விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

simbu
simbu

By

Published : Dec 11, 2019, 4:49 PM IST

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. ஆனால், சில காரணங்களால் அப்படம் கை விடப்பட்டதாகவும், விரைவில் புதிய சில மாற்றங்களுடன் அப்படம் தொடங்கும் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.

ஐயப்பனைக் காண வரும் சிம்பு

இப்படத்தில் சிம்புக்குப் பதில் வேறு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்திருந்தார். இந்த வேளையில் 'மகா மாநாடு' என்னும் புதிய படத்தை சிம்புவே இயக்கி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது மீண்டும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்றும்; நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், சிம்பு ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்ல முடிவுசெய்திருந்தார். அதன்படி சமீபத்தில் சிம்பு மாலை அணிந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

பக்தியுடன் ஐயப்பனை தரிசனம் செய்யும் சிம்பு

தற்போது முறையாக விரதம் இருந்து சிம்பு சபரிமலைக்குச் சென்று, சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமீப காலமாக சிம்புவின் கவனம் ஆன்மிகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. காசி, இமயமலை என அவர் ஆன்மிக ட்ரிப் அடித்தபடியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 'பெரியார்' ஆதரவாளராக சிம்பு பாடிய பெரியார் குத்துப் பாடலையும், அவரது ஆன்மிகப் பயணத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

இனிதே ஆரம்பமான 'தலைவர் 168' பட பூஜை!

ABOUT THE AUTHOR

...view details