தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்த ஆயுஷ்மான்! - Latest cinema news

நடிகர் ஆயுஷ்மான் குரானா நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

ஆயுஷ்மான்
ஆயுஷ்மான்

By

Published : Jul 9, 2020, 4:20 PM IST

கரோனா வைரஸ் காரணமாக, கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் மட்டும் சீரியல், விளம்பர படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சண்டிகரில் நடைபெற்ற விளம்பர படப்பிடிப்பில் நடிகர் ஆயுஷ்மான் குரானா கலந்து கொண்டார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து அவர் பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, "பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வது மிகவும் நன்றாக உள்ளது. எல்லோரும் வீட்டிலேயே இருந்தோம். வீட்டில் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது. கரோனா வைரஸிலிருந்து நாடு விரைவில் மீண்டு வர வேண்டும்.

அதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன், நாம் வெளியே செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details