நாடு முழுவதும் பரவி வரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தகுந்த இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் குறித்த சரியான புரிதல் இல்லாமையால் தான், தவறான தகவல்கள் தொடர்ந்து மக்களிடையே பரப்பப்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அதற்கு சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், டிக்டாக் செயலி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதை நடிகர் ஆயுஷ்மான் குரானா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த விழிப்புணர்வு வீடியோவில், ’போலியான தகவல்களை பரப்புவது, கரோனா பரவுவதை காட்டிலும் ஆபத்தான விஷயம். அதனால் கரோனா வைரஸ் குறித்த போலி வீடியோக்கள் மற்றும் செய்திகளை ஃபார்வேர்டு செய்ய வேண்டாம்” என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன், இந்தி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, சாரா அலி கான், க்ரித்தி சனோன் ஆகியோர் நடித்து உள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:தாராவி ராப் பாடகர்கள் உருவாக்கியுள்ள கரோனா விழிப்புணர்வு பாடல்!