இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரமெடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இந்தாண்டு வெளியாகவிருக்கும் படம் ஐங்கரன்.
இதை தவிர '100% காதல்', 'அடங்காதே' போன்ற படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் ’ஐங்கரன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷின் 'ஐங்கரன்' படத்தின் இசைவெளியீட்டு தேதி அறிவிப்பு! அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி இசை மட்டும் அல்லாமல் இப்படத்தின் ட்ரெய்லரையும் வெளியிடப்போவதாக அறிவித்திருப்பது ஜி.வி.பிரகாஷின் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக அமைந்துள்ளது.