தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கிறிஸ்துமஸை குறிவைக்கும் அயலான்! - ayalan movie to hit theatres on christmas

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸை குறிவைக்கும் அயலான்
கிறிஸ்துமஸை குறிவைக்கும் அயலான்

By

Published : Jan 24, 2021, 9:58 PM IST

'இன்று நேற்று நாளை' திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்டோர் 'அயலான்' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது. இப்படம் ஏலியன் படம் என்பதால் இதன் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது.

எப்படியும் கிராபிக்ஸ் பணிகளை முடிக்க பத்து மாதங்கள் தேவைப்படும் என்பதால் படத்தின் வெளியீட்டை பொறுமையாக வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிடலாம் என்ற எண்ணத்தில் படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க... இந்திய அணிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details