'இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘அயலான்’.
கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
’இன்று நேற்று நாளை’ படத்தைப் போன்று இதுவும் சயின்ஸ்-பிக்சன் ரக படமாக உருவாகிவருகிறது. இன்று (பிப். 17) சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு 'வேற லெவல் சகோ' என்னும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் பாடியுள்ள இந்தப் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸை குறிவைக்கும் அயலான்!