ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏலியன் குறித்த சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.
அயலான் திரைப்பட டப்பிங் பணிகள் தொடக்கம்! - ayalaan movie dubbing works started
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கின.
![அயலான் திரைப்பட டப்பிங் பணிகள் தொடக்கம்! ayalaan movie dubbing works started](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10758865-252-10758865-1614169045201.jpg)
ayalaan movie dubbing works started
இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று (பிப். 25) தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கிறிஸ்துமஸை குறிவைக்கும் அயலான்!