சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. ரவிக்குமார், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ் பெற்றவர் ஆவார். 'அயலான்' திரைப்படமே இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இயக்குநரின் முந்தைய படத்தைப் போன்றே, இத்திரைப்படமும் சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.