தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தேசிய விருது வென்ற திரைப்படத்தில் அகர்வாலுடன் ஜோடியாகும் மக்கள்செல்வன்...? - இந்தியன் 2

நடிகை காஜல் அகர்வால், விஜய் சேதுபதியுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

awe 2

By

Published : Aug 20, 2019, 5:51 PM IST

நடிகை காஜல் அகர்வால் தமிழில் ஜெயம் ரவியுடன் 'கோமாளி' படம், தெலுங்கில் நடிகர் சர்வானந்த் உடன் 'ரணரங்கம்' திரைப்படம் ஆகியவை சமீபத்தில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அதேபோல் கமல் நடிப்பில் உருவாகும் 'இந்தியன் 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கடந்தாண்டு தெலுங்கில் வெளியான 'ஆவ்' திரைப்படம் தேசிய திரைப்பட விருதில் சிறந்த விஎஃப்எக்ஸ் (VFX), சிறந்த மேக்ஆப் விருது பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் வர்மா இயக்கினார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் 'ஆவ் 2' இயக்க பிரசாந்த் முடிவுசெய்துள்ளார். முதல் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த காஜல் அகர்வால் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

ஆவ் வில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நித்யாமேனன் ரெஜினா, ஈஷா, முரளி சர்மா, ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது உறுதியாகும் பட்சத்தில் விஜய் சேதுபதி, காஜல் அகர்வால் முதல் முறையாக ஜோடி சேரும் படமாகும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களே இப்படத்திலும் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details